வர்த்தகம், சட்ட செயலாக்கம் உள்ளிட்டவை தொடர்பான நான்கு ஒப்பந்தங்களில் சிங்கப்பூரும் சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. சீனாவிலுள்ள டியாவ் யூ டை அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் லீ சியன் லூங்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு இரண்டு புதிய பங்காளித்துவங்களில் இணைந்துள்ளது. சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு கடந்தாண்டு 13.5 பில்லியன் வெள்ளியை எட்டியதாக அமைச்சின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

