பிரதமர் லீ: தலைமைத்துவ மாற்றத்தால் பாதிப்பில்லை, சிங்கப்பூருடன் நட்புறவைத் தொடர விரும்பும் சீனா

பிரதமர் லீ: தலைமைத்துவ மாற்றத்தால் பாதிப்பில்லை, சிங்கப்பூருடன் நட்புறவைத் தொடர விரும்பும் சீனா

2 mins read
d6566ecc-5982-4f3c-b784-ed82507db692
பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக பிரதமர் லீ தம்முடன் இளம் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்துச் சென்றார். படம்: ராயட்டர்ஸ் -

பிரதமர் லீ சியன் லூங், தமக்குப் பிறகு புதியவர் பிரதமர் பொறுப்பு ஏற்ற பின்னரும் சிங்கப்பூருடன் சுமூகமான உறவையும் நட்புறவை யும் தொடர சீனா விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட, தனிப்பட்ட நபர் களால் இரு தரப்பு உறவு பாதிக்கப் படாது என்று கூறிய அவர், சிங்கப்பூரின் இளம் தலைவர்கள் ஏற்கெனவே சீனாவுடன் பல்வேறு தளங்களில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

"தலைமைத்துவ மாற்றம் சுமூகமாக நடைபெறும் என்று நம்புகிறேன். சிங்கப்பூருடன் தொடர்ந்து நட்புறவையும் சுமூக உறவையும் கட்டிக்காக்க சீனா விரும்புகிறது. இது இரு நாடு களின் விருப்பமாகும்.

"சில குறிப்பிட்ட, தனிப்பட்ட தலைவர்களைப் பொறுத்து இந்த உறவு அமை யாது," என்று பிரதமர் லீ விளக்கம் அளித் தார்.

சீனாவில் தலைநகர் பெய்ஜிங் கில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக இணைப்புப் பாதைத் திட்டத்தின் கருத்தரங்கில் பங் கேற்ற பிறகு தமது ஐந்து நாள் பயணத்தின் முடிவில் திரு லீ செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக சீனாவின் இரு பெரும் தலைவர்களான அதிபர் ஸி ஜின்பிங்கையும் சீனப் பிரதமர் லியையும் அவர் சந்தித்தார்.

இதன் பிறகு இரு நாடு களுக்கு இடையே ஐந்து ஒப்பந் தங்கள் கையெழுத்தான நிகழ்ச் சியில் அவர் கலந்துகொண்டார்.

நிதி அமைச்சரான ஹெங் சுவீ கியட் துணைப்பிரதமராவார் என கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் லீ அறிவித்தார்.

இதன் மூலம் சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் ஹெங் சுவீ கியட் என்பது உறுதியாகியுள்ளது.

மே 1ஆம் தேதி (நாளை) நிதி அமைச்சரான திரு ஹெங் சுவீ கியட் துணைப் பிரதமராக பொறுப்பு ஏற்கவிருக்கிறார்.

அதே சமயத்தில் ஏற்கெனவே துணைப் பிரதமர் பொறுப்பில் உள்ள டியோ சீ ஹியனும் தர்மன் சண்முகரத்னமும் மூத்த அமைச் சர்களாகின்றனர்.

சிங்கப்பூரில் நிகழும் தலை மைத்துவ மாற்றத்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு பிரதமர் லீ பதில் அளித்தார்.