சிங்கப்பூர் ஊழியர்களுக்கு உதவ குறுகிய, நீண்டகாலத் திட்டங் களை அரசாங்கம் வகுத்து வரு கிறது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள் ளார்.
வேலை செய்யும் வயது வரம்பையும் மறுவேலை வாய்ப்பு வயதையும் உயர்த்துவது போன்ற நீண்டகாலத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் வேளை யில் அவர்களுடைய உடனடி பிரச்சினைகளிலும் அரசாங்கம் அக்கறை காட்டும் என்றார் அவர்.
அரசாங்கம், ஊழியர்களை தொழில்நுட்பப் பாதையில் இட்டுச் செல்லும். இது, சிறந்த வேலை களையும் சிறந்த சம்பளத்தையும் பெற உதவி செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஓய்வு வயதை 62லிருந்தும் மறுவேலை வாய்ப்பு வயதை 67லிருந்தும் உயர்த்துவது நீண்ட காலத்திட்டமாகும்.
இதற்கு, மூத்த ஊழியர் களுக்கான பணிக்குழுவில் அங் கம் வகிக்கும் அரசாங்கம், முத லாளிகள், தொழிற்சங்கம் ஆகிய முத்தரப்பு பிரதிநிதிகளிடையே கருத்திணக்கம் காணப்பட்டுள் ளது.
இதன் காரணமாக முதிய ஊழியர்களுக்கான வேலை மறு வடிவமைப்பு, திறன் மேம்பாடு களில் முதலீடு செய்ய முத லாளிகள், ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரையும் ஊக்கமூட்டும் என்று இரண்டாம் உள்துறை அமைச்சருமான ஜோசஃபின் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான விவரங்களும் 55 வயது, அதற்கு மேற்பட்ட வயது டைய ஊழியர்களுக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு பற்றியும் இவ்வாண்டு இறுதியில் அறிவிக் கப்படும் என்று அவர் கூறி னார்.
கடந்த ஆண்டு உள்ளூர் குடிமக்களுக்கு வலுவான வேலை வாய்ப்புகளைக் காண முடிந்தது. வேலையின்மை, வேலையிழப்பு விகிதமும் குறைந்திருந்தது. சம்பளம் அதிகரித்தது. இருப் பினும் வேலை தேடும் ஊழியர் களும் வேலையில் முன்னேற விரும்புபவர்களும் இருக்கின்ற னர்.
வெளிநாட்டு ஊழியர் அணியைக் குறைக்கும் நடவடிக் கையில் ஊழியர் தேவையைச் சமாளிக்க மறுசீரமைப்பு, வேலை தரத்தை உயர்த்த முதலாளிகளை ஊக்குவித்தல் போன்றவை மூலம் சமாளிக்கப்படும் என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ சொன்னார்.

