டைகர்ஏர் விமானப் பயணிகளுக்குச் சொந்தமான பயணப் பெட்டிகளின் எடையைக் குறைத்துக் காட்ட குறைந்தது $800 லஞ்சம் வாங்கிய விமான நிலைய ஊழியருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தளவாடச் சேவை நிறுவனம் யுபிடிஎஸ் நிறுவனத்துக்காக இந்திய நாட்டவரான 37 வயது பட்டேல் ஜித்தேஷ்குமார் சந்துபாய் (படம்) பணிபுரிந்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை பட்டேல் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு $800 அபராதம் விதிக்கப்பட்டது.
37 வயது கோபால் கிருஷ்ணா ராஜுவிடமிருந்து பட்டேல் லஞ்சம் வாங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப் பிட்டன.
சாங்கி விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியராகப் பணிபுரிந்தபோது லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கடந்த சில நாட்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பட்டேலும் ஒருவர்.
அவருக்கு முன்பு இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

