ஹாங்காங்கில் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்ஏஎஃப் கவச வாகனங்கள்: கப்பல் நிறுவனம், மாலுமி குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

ஹாங்காங்கில் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்ஏஎஃப் கவச வாகனங்கள்: கப்பல் நிறுவனம், மாலுமி குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

2 mins read
61f098a1-3b9b-484b-8f54-877d041ce3f1
-

சிங்கப்பூர் ஆயுதப் படைக்குச் சொந்தமான ஒன்பது கவச வாகனங்கள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹாங் காங்கில் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கவச வாகனங்களின் மதிப்பு $24 மில்லியன்.

இதற்கிடையே, தகுந்த உரிமம் இல்லாமல் அந்தக் கவச வாகனங்கள் ஹாங்காங்கிற்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத் தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

இரண்டு வார வழக்கு விசாரணைக்குப் பிறகு ஏபிஎல் நிறுவனத்தையும் கப்பலின் மாலுமியான சீன நாட்டவர் பான் சியேஜுனையும் குற்றவாளிகள் என ஹாங்காங் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்ள வில்லை என்று ஏபிஎல் நிறுவனத் தின் நிர்வாகத்தினரும் கப்பல் மாலுமியும் தெரிவித்துள்ளனர். உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யும் குற்றத்துக்கு அதிகபட்ச மாக ஏழாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றத்துக்காக விதிக் கப்படும் அபராதத் தொகையின் அதிகபட்ச அளவு நிர்ணயிக்கப் படவில்லை.

கப்பலில் இருந்த கொள்கலன் களுக்குள் கவச வாகனங்கள் இருந்ததை ஏபிஎல் நிறுவனத் துக்கும் கப்பலின் மாலுமிக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்றும் சுங்கத்துறை அதிகாரி களிடம் தெரிவிக்க அவர்கள் தவறியதாகவும் தகுந்த உரிமத் தைப் பெறத் தவறியதாகவும் நீதிபதி கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தைவானில் இடம்பெற்ற ராணுவப் பயிற்சிக்குப் பின் சிங்கப்பூருக்குத் திருப்பிக் கொண்டு வர அந்த ஒன்பது கவச வாகனங்களும் 'ஏபிஎல் கத்தார்' கப்பலில் ஏற்றப்பட்டன. அந்தக் கப்பல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று காலை 8.32 மணிக்கு குவாய் சுங் கொள்கலன் துறைமுகத்தின் எட்டாவது முனையத்தில் நங்கூரமிட்டது.

ஹாங்காங்கின் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் கப்பலில் கவச வாகனங்கள் இருப்பதை அதன் ஆவணங்கள் காட்டத் தவறியதாகக் கூறப்படு கிறது.

ஏபிஎல் ஊழியர்களிடம் விசாரித்த பிறகு கொள்கலன் களுக்குள் வாகனங்கள் இருப்பதாக அந்நிறுவனம் ஆவணம் ஒன்றைச் சமர்ப்பித்தது.

இதனால் கவச வாகனங்களை ஹாங்காங் அதிகாரிகள் பறிமுதல் செய்து குவேன் முன்னில் உள்ள ரிவர் டிரேட் முனையத்தில் வைத்திருந்தனர்.

விசாரணை நிறைவுற்றதும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று கவச வாகனங்கள் சிங்கப்பூர் அரசாங் கத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.