பணிகளின் எதிர்காலம் குறித்து ஆசியான் மனிதவள அமைச்சர்கள் கலந்துரையாடல்

பணிகளின் எதிர்காலம் குறித்து ஆசியான் மனிதவள அமைச்சர்கள் கலந்துரையாடல்

1 mins read
c3bd710f-bf6d-409d-bda7-0d0eec26567b
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ -

வேலைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங் களுக்குத் தயாராகும் திறனை ஆசியான் மக்களிடையே வலுப்படுத்த புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான பரிந்துரையை சிங்கப்பூர் வைத்துள்ளது. திட்டம் குறித்து ஆசியான் நாடுகளின் மனிதவள அமைச்சர்கள் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடினர்.

மாநாட்டின் திறப்பு விழாவில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, பயிலரங்குகள், கருத்தரங்குகள், பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் ஆசியானின் திறன்களை மேம்படுத்த இந்தத் திட்டம் அனைத்துலக நிபுணர்களையும் வட்டார பங்குதாரர் களை இணைக்கும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரி வித்தார்.

"ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து கற்றுக்கொள்ள, திறன்களை வளர்த்துக்கொள்ள, சிறந்த அணுகு முறைகளைப் பகிர்ந்துகொள்ள ஆசியானுக்குத் தளமேடை ஒன்று தேவைப்படுகிறது," என்றார் அமைச்சர் டியோ. பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான வழிகளைக் கண்டறிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், ஆசியான், அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு, இதர பங்குதாரர்கள் ஆகியவற்றுடன் தமது அமைச்சு இணைந்து செயல்படும் என்று அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.