‘மறுபயனீடு பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை’

பத்தில் ஆறு சிங்கப்பூர் குடும் பங்கள் குறைந்தது வாரத்துக்கு ஒருமுறை மறுபயனீடு செய்வ தாக  அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகள் கூறு கின்றன. தாட்கள், துணிகள் போன்றவை மறுபயனீடு செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மறுபயனீடு செய்யக்கூடிய   பொருட்களுக்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வீசக்கூடாத பொருட்கள் குறித்து சிங்கப்பூரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற, நீர்வளத்துறை அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை நடத்திய ஆய்வுகளில் 5,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்கள் பங்கெடுத்தன.

பொருட்களை அடிக்கடி மறுபயனீடு செய்பவர்களில் 56 விழுக்காட்டினர் குறைந்தது வாரத்துக்கு ஒருமுறை நீல நிற மறுபயனீட்டுத் தொட்டிகளைப் பயன்படுத்துவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பழைய செய்தித்தாட்கள், சஞ்சிகைகள், கடிதங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை ஆக  அதிமாக மறுபயனீடு செய்யப்பட்டதாக அறியப்படு கிறது. இந்தப் பொருட்கள் நீல நிற மறுபயனீட்டுத் தொட்டி களுக்குப் பொருத்தமானவை. ஆனால் இந்தத் தொட்டிகளில் உணவுப் பொருட்களும் திரவங்களும் வீசப்படுவதாக தெரியவந்துள்ளது.

துணிகள், காலணிகள், பைகள் ஆகிய பொருட்களும் ஆக அதிகமாக மறுபயனீடு செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றை நீல நிற மறுபயனீட்டுத் தொட்டிகளில் வீசக்கூடாது. பிளாஸ்டிக் புட்டிகள், அலுமி னிய கேன்கள், பீர் கிளாஸ்கள், ஒயின் புட்டிகள் ஆகியவை அதிகமாக மறுபயனீடு செய்யப் படுகின்றன. 

ஆனால் இவற்றை மறுபயனீட்டுத் தொட்டிகளில் வீசுவதற்கு முன்பு அவற்றைத் தண்ணீரில் அலசினால் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபயனீடு செய்வதற்கான வசதிகள் இருப்பதால் சிலர் அடிக்கடி மறுபயனீடு செய்வதாக அமைச்சு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சிலர் அரசாங்கத்தின் ஊக்குவிப்பு காரணமாக மறுபயனீடு செய்வ தாக கூறப்படுகிறது. 

மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்கள் தங்களிடம் மிகக் குறைந்த அளவில் இருப்பதால் மறுபயனீடு செய்வதில்லை என்று மறுபயனீடு செய்யாதவர் களில் பலர் காரணம் கூறினர். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon