முஸ்லிம்களுக்குப் புனிதமான ரமலான் மாதத்தில் கேலாங் செராய் விழாக்கோலத்தில் மிளிர உள்ளது. கம்பத்து உணர்வுக்குப் புத்துயிரூட்டும் பொருட்டு மலாய், முஸ்லிம் பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கிய 50 வண்ண விளக்குகள் அந்த வட்டாரத்தில் பொருத்தப்படும்.
கேலாங் ரோடு, சாங்கி ரோடு, சிம்ஸ் அவென்யூ ஆகியவற்றின் வழியாகச் செல்லும் சாலைகளில் 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வண்ண விளக்குகள் மே மாதம் 3ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 16ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும்.
நோன்புப் பெருநாள் இவ்வாண்டு ஜூன் 5ஆம் தேதி இடம்பெறுகிறது. ரமலான் மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குகிறது.
ரமலான் ஒளியூட்டை அதிபர் ஹலிமா யாக்கோப் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைப்பார்.

