சுடச் சுடச் செய்திகள்

சிலேத்தார் நிலையத்தில் விமானம் தரையிறங்கவில்லை

சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஃபையர்பிளை விமானம், கனத்த மழையின் காரணமாக ஜோகூரின் செனாய் விமான நிலையத்திற்குத் திசைத்திருப்பிவிடப்பட்டுள்ளது. ஓடுபாதையைத் தெளிவாகப் பார்க்க முடியாததால் அதன் விமானிகள் தரையிறங்கவில்லை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

‘எஃப்வை 3132’ விமானம் திங்கட்கிழமை காலை 5.10 மணிக்கு சுபாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்குத் தரையிறங்க வேண்டியிருந்தது.  கருவி அடிப்படையிலான தரையிறங்கலுக்கான வழிமுறைகளை சிலேத்தார் விமான நிலையம் பின்பற்றுவதில்லை. அதனால் விமானிகள் தங்கள் பார்வைக்குத் தென்படுவதை வைத்து தரையிறங்க முடிவெடுக்கவேண்டும்.

வானிலை காரணமாக விமானம் திசைத்திருப்பப்பட்டதை உறுதி செய்த ஃபையர்பிளை நிறுவனப் பேச்சாளர் “பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம்,” எனக் கூறினார். விமானத்தில் இருந்த 25 பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சிலேத்தாரிலிருந்து சுபாங்கிற்குத் திரும்ப வேண்டிய அந்த விமானத்திற்காகக் காத்திருந்த 35 பயணிகள், சாங்கி விமான நிலையத்திலிருந்து மலேசிய ஏர்லைன்ஸ் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon