புதிய சுகாதார மையம் ஒன்று ஜூரோங் வட்டாரத்தில் கட்டப்படும். இந்த மையம், 700 படுக்கைகள் கொண்ட தாதிமை இல்லத்தையும் பலதுறை மருந்தகம் ஒன்றையும் ஒருங்கிணைக்கிறது. ஜூரோங் வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் சராசரி வயது, தேசிய சராசரி வயதைவிட அதிகமாக இருப்பதாக சுகாதார மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்திருக்கிறார்.
2025ஆம் ஆண்டுக்குள் ஜூரோங்கில் வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருப்பர். அதற்குள் புதிய பலதுறை மருந்தகமும் தாதிமை இல்லமும் தயாராகும்.

