சுடச் சுடச் செய்திகள்

பிரதமர் லீ: பயிற்சி பெறுதல், திறன் மேம்பாடுஅவசியம்

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் புதிய தொழில் நுட்பத்தைக் கையாளவும் புதிய வேலைகளுக்கு அவர்களைத் தயார் செய்யவும் சிங்கப்பூர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தந்திருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் ஆட்குறைப்பு விகிதம் கடந்த ஆண்டு ஆகக் குறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி, திறன் மேம்பாடு, ஊழியர்களை வேறு துறை களுக்கு மாற்றுவது ஆகியவை வலியுறுத்தப்பட்டிருக்காவிடில் நிறுவனங்கள் அவற்றின் மூத்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து அவர்களுக்குப் பதிலாகப் புதிய பட்டதாரிகளை வேலையில் அமர்த்தியிருக்கும் என்று பிரதமர் லீ கூறினார்.
இதனால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பர் என்றார் அவர்.
“பயிற்சி பெறுவது, திறன் களை வளர்த்துக்கொள்வது ஆகியவற்றில் மேற்கொள்ளப் படும் முயற்சிகளை நாம் தொடர வேண்டும். 
“இது ஒரு முடிவில்லாப் பயணம். இருப்பினும், இதில் நாம் முன்னேற்றம் கண்டு வருகிறோம்,” என்று திரு லீ கூறினார். 
மிக விரைவாக மாறி வரும் வெளிப்புறச் சூழலில் பழைய தொழில் துறைகளும் வேலை களும் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாக திரு லீ சுட்டினார். 
புதிய வேலைகள் உருவாக் கப்பட்டாலும் பணிகளின்  எதிர் காலம் மிகவும் வித்தியாசமாக  தென்படுகிறது என்றார் அவர்.
இதற்கு தொழிலாளர் இயக்கம்  திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்த திரு லீ, இனி வரும் சவால்களை எதிர்பார்த்து அவற்றை எதிர்கொள்ள தொழிற் சங்கங்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள் ஆகி யோரை முன்கூட்டியே தயார்ப் படுத்த தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (என்டியுசி) அழைப்பு விடுத்தார்.
மூத்த ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவதில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆற்றிய பெரும் பங்கைத் திரு லீ உதாரணமாகக் காட்டினார்.
இது மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புப் பங்காளித்துவப் பணிக்குழுவின் ஒரு பகுதி.
வேலையிலிருந்து ஓய்வுபெறும், மறுவேலை நியமனம் ஆகிய வற்றுக்கான வயது தற்போது முறையே 62, 67.
இவற்றை உயர்த்துவதற்கான உடன்பாட்டை அடைய இந்தப் பணிக்குழு உதவியுள்ளது.
படிப்படியாக உயர்த்தப்படும் சம்பள அணுகுமுறைக்குப் பணிக் குழு தலைமைதாங்கியது. 

சிங்கப்பூரில் ஆக்கபூர்வமுள்ள தொழிற்சங்கங்களும் முதலாளி களும் ஆதரவுமிக்க அரசாங்கத் துடன் இணைந்து ஊழியர் களுக்குக் கூடுதல் சம்பளங்கள் வழங்குவதாக திரு லீ கூறினார். 
இது நாட்டுக்குச் சீரான முன்னேற்றத்தைத் தந்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon