'கெரொசல்' இணையத்தளத்தில் பொருட்களைப் போல் பணிப் பெண்களை விளம்பரம் செய்ததற் காக எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு நேற்று $78,000 அபராதம் விதிக் கப்பட்டது. வெளிநாட்டுப் பணிப் பெண்களைக் கண்ணியமற்ற வகையில் விளம்பரப்படுத்தியது உட்பட மொத்தம் 45 குற்றச் சாட்டுகளைச் சென்ற மாதம் நிறு வனம் ஒப்புக்கொண்டது.
அத்துடன் தண்டனை விதிப் பின்போது மேலும் 99 குற்றச் சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட் டன. மனிதவள அமைச்சின் வேலைவாய்ப்பு நிறுவன உரிம நிபந்தனைகளின்படி எஸ்ஆர்சி நிறுவனம் பல விதிமுறைகளை மீறியுள்ளது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் ஊழியரான எர்லீனா முகம்மது அலி, 41, இணையத்தளத்தில் இந்தோனீசிய பணிப்பெண்களின் விவரங்களை விளம்பரம் செய் தார். ஆனால் விற்பனைப் பொருட்கள் போன்று பணிப் பெண்கள் விளம்பரம் செய்யப்பட் டனர். உதாரணத்திற்கு ஒரு பணிப்பெண்ணைத் தேர்வு செய் தால் அவரை வாங்கலாம் என் றும் அவர் வாங்கப்பட்டுவிட்டார் என்றும் விளம்பரம் அமைந்தது.
இதன் தொடர்பில் எர்லீனா வுக்கு ஏற்கனவே சென்ற நவம்பர் மாதம் $20,000 அபராதம் விதிக் கப்பட்டது. அத்துடன் நிறுவனத் திலிருந்து அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார்.
இணையத்தள விளம்பரங் களில் எஸ்ஆர்சி நிறுவனம் அதன் முழு பெயரையும் உரிம எண்ணையும் தெரிவிக்கத் தவறியது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவுள்ளதாக மனிதவள அமைச்சு அதனிடம் தெரிவித் திருப்பதாக நேற்றைய அறிக்கை கூறியது.

