டெப்போ சாலையில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்றில் தீப்பற்றிக்கொண்டது.
டெப்போ சாலையிலுள்ள புளோக் 104C அருகே உள்ள அடுக்குமாடி கார் நிறுத்து மிடத்தில் மாலை 4.05 மணியளவில் தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தகவல் கிடைத்ததும் தற்காப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாக கூறப்பட்டது. நிறுத்தப்பட்ட நிலையில் கார் தீப்பற்றியதாக நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை. இந்நிலையில் கார் தீப்பிடித்த காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீச்சம்பவத்தைக் காட்டும் காணொளி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

