போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோது 20 வயது ரிஷி கிரிஸ்டஃபர், ஒரு மாதைத் தாக்கி அவருடைய பணப்பையைப் பறிக்க முயன்றார். இக்குற்றச்சாட்டின் தொடர்பில் நேற்று அவருக்கு ஓராண்டு சீர் திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது. இதன்படி சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் அணிவகுப்புப் பயிற்சிகள், ஆலோசனை அமர் வுகள் போன்ற ஒரு கட்டுப்பாடான அட்டவணையைப் பின்பற்றவேண் டும்.
சென்ற ஆண்டு 53 வயது மாதைப் பலமுறை முகத்தில் குத் திப் பல எலும்பு முறிவுகளை ஏற் படுத்தியதுடன் மாதின் கழுத் தையும் ரிஷி நெறித்தார். தாக் கப்பட்ட மாது இன்னமும் அதிர்ச் சியிலிருந்து மீள முடியாமல் மன நல சிகிச்சைகளுக்குச் சென்று வருகிறார்.
காயம் விளைவித்துத் திருட முயன்ற குற்றச்சாட்டை சென்ற மாதம் ஒன்பதாம் தேதியன்று ரிஷி ஒப்புக்கொண்டார். அத் துடன் திருட்டு, நம்பிக்கை மோசடி, போதைப்பொருள் வைத் திருந்தது, அதை உட்கொண்டது ஆகிய குற்றங்களையும் ஒப்புக் கொண்டார். முதன்முதலில் சென்ற செப்டம்பர் 20ஆம் தேதி அன்று தோ பாயோவில் நடந்த ஒரு சோதனையின்போது போதைப்பொருள் தொடர்பில் போலிசார் ரிஷியைக் கைதுசெய் தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட காலகட்டத்தில் ரிஷி, மேலும் குற்றம் புரிந்தார்.

