$183,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது; நால்வர் பிடிபட்டனர்

$183,000 மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது; நால்வர் பிடிபட்டனர்

1 mins read
6d34d43c-469d-4749-86af-aabd251cc43b
-

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கொண்ட சோதனைகளில் 2 கிலோ ஹெராயின் உட்பட சுமார் $183,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் நான்கு பேர் பிடிபட்டனர்.

அதிகாரிகள், ஏப்ரல் 30 பிற்பகல் நேரத்தில் ஜூ சியாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிட்டனர். அங்கு சிங்கப்பூரரான 48 வயது ஆடவரும் 33 வயதுள்ள வெளிநாட்டு பெண்மணி ஒருவரும் பிடிபட்டனர்.

கைதான அந்த ஆடவருடன் தொடர்புடையோர் என்று நம்பப்படும் இதர இரண்டு சந்தேகப்பேர்வழிகள் பின்னர் சிக்கினர். அவர்களில் ஒருவர் 35 வயது சிங்கப்பூரர். மற்றொருவர் 26 வயது மலேசியர். பிடிபட்ட மலேசியரிடமிருந்து $13,800 கைப்பற்றப்பட்டது. சந்தேகப்பேர்வழிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ரொக்கம். படம்: போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு