சுடச் சுடச் செய்திகள்

மசெக, என்டியுசி அணுக்க உறவே  வெற்றிக்கு காரணம்

மக்கள் செயல் கட்சிக்கும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசுக்கும் (என்டியுசி)  இடையில் அணுக்க மான உறவு இல்லாது இருந்திருந் தால் சிங்கப்பூர் தன்னுடைய ஆரம்பகால நெருக்கடிகளைச் சமாளித்து இருக்க முடியாது. 

  தொழில்மய நாடாக அது வேக மாக உருமாறி இருக்கவும் முடி யாது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். 

சுதந்திரம் அடைந்த காலகட்டத் தில் ஏராளமானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. அப்போது முதலீட்டாளர்களை ஈர்த்து, தொழில்மய நாடாகி, வேலைகளை உருவாக்க அரசாங்கம் திட்டவட்ட மாகச் செயல்படவேண்டி இருந்தது என்பதைத் தன்னுடைய முதலாவது மே தினப் பேரணி உரையில் துணைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

திரு ஹெங், சுமார் 1,600 தொழிற்சங்கவாதிகள், ஊழியர் கள், முதலாளிகள், அமைச்சர்கள் ஆகியோரிடையே பேசினார். அந்த நிகழ்ச்சி டௌன்டவுன் ஈஸ்ட்டில் நடந்தது.புதியதொருநாட்டை உரு வாக்க வேண்டிய தேவை நிலவிய  ஒரு நிலையில், தொழிற்சங்கவாதி களும் நாட்டை உருவாக்குவோராக ஆக வேண்டி இருந்தது என்பதை நிதி அமைச்சருமான திரு ஹெங் சுட்டிக்காட்டினார். 

கடந்த 1969ஆம் ஆண்டு நடந்த ‘என்டியுசி நவீனமய ஆய் வரங்கை’ மிக முக்கிய நிகழ்ச்சி யாகத் திரு ஹெங் குறிப்பிட்டார். 

ஊழியர்களின் நலன்களுக்கு ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுப் பதற்கு அப்பாலும் மேலும் பல பணிகளையும் தாங்கள் ஏற்க வேண்டும் என்பதை தொழிற்சங் கங்கள் அந்த ஆய்வரங்கின் போது ஒப்புக்கொண்டன. 

கடந்த 1970களில் தொழிலாளர் இயக்கம் உருமாறி இருக்கவில்லை என்றால் சுதந்திரத்திற்குப் பிந் தைய சிங்கப்பூரில் அந்த இயக்கம் ஏற்புடைய இயக்கமாக இல்லாமல் போயிருக்கக்கூடும். அந்த  இயக் கத்தில் உறுப்பினர்களின் எண் ணிக்கையும் குறைந்து போயிருக் கும் என்றார் திரு ஹெங். 

ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நமது சமூகப் பொருளியல் மேம்பாட்டின் இணை உந்து சக்திகளாகத் தொழிற்சங்கங்கள் திகழவேண்டி இருந்தது என்றார் திரு ஹெங். 

டௌன்டவுன் ஈஸ்ட்டில் நேற்று நடந்த மே தினப் பேரணியில் பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் முதலானோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon