அறப்பணி மூலம் 455 பேர் உதவி

அறப்பணி மூலம் 455 பேர் உதவி

1 mins read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள சிறார்களுக்கு உதவும் நோக்கத்தில் $100,000க்கும் அதிக தொகையைத் திரட்ட நேற்று சுமார் 455 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.

கோங் மெங் சான் போர் கார்க் சீ மடத்தில் நடந்த வருடாந்திர 'நம்பிக்கைக்குச் சிகை' என்ற நிகழ்ச்சியில் அவர்கள் அறப்பணிக்கு உதவினர். அந்த மடத்தைச் சேர்ந்தவர்கள், தொண்டூழியர் கள், பக்தர்கள், புத்த மதத்தினர் பலரும் அந்த அறப்பணி மூலம் உதவினர்.

சிறார் புற்றுநோய் அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி நடந்தது. குறைந்தபட்சம் 6,000 பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களுடன் $3.6 மில்லியன் திரட்டுவது இந்த அறநிறு வனத்தின் இலக்கு.

பீஷானில் இருக்கும் இந்த மடம், இந்த அறப்பணி இயக்கத்தின் முக்கிய உதவி அமைப்பாகத் திகழ்கிறது. இதுவரை $1.2 மில்லியனுக் கும் அதிகத் தொகையை அது திரட்டித் தந்துள்ளது.