பல்கலைக்கழக கட்டொழுங்கு  பரிந்துரைகள் மே நடுவில் தயார்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கத்தின் கட்டொழுங்கு மற்றும் ஆதரவு ஏற்பாட்டுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இந்த மாத நடுப்பகுதியில் தன்னுடைய பரிந் துரைகளைக் கலந்தாலோசனைக் காக தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அது முழுமையாகப் பரிந்துரை களைத் தாக்கல் செய்யும். புதிய கல்வி ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கும்போது அந்தக் குழு தன்னுடைய பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்ளும் என்று முன்ன தாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தக் குழுவுக்குத் தலை வியாக திருவாட்டி கே குயோக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பாட்சியாளர்கள் சபையின் உறுப்பினர் ஆவார்.

இந்த மறுபரிசீலனைக் குழு வில் இந்தப் பல்கலைக்கழகத்தின் மேலும் இரண்டு மாணவர்கள் சேர்வார்கள் என்று திருவாட்டி கே நேற்று இந்தப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுக்கும் இப் போதைய மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுப்பிய மின் னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மின்னஞ்சலைத் தான் பார்த்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சில் பொது தூதராகவும் யேல் - என்யுஎஸ் நிர்வாக சபையின் உறுப்பினராக வும் இருக்கும் பேராசிரியர் சான் ஹெங் சீயும் அந்தக் குழுவில் புதிய உறுப்பினராக இடம்பெற்று இருப்பார்.

அந்தக் குழு கட்டொழுங்கு ஏற்பாடு திட்டங்களைப் பரந்த அளவில் மறுபரிசீலனை செய்யும் என்று திருவாட்டி கே கூறினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மோனிகா பே, 23, என்ற மாணவி, இன்ஸ்டகிராமில் ஒரு தகவலை வெளியிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள யூசோஃப் ஹால் விடுதியில் சென்ற நவம்பரில் தான் குளித்த போது படம் பிடிக்கப்பட்டது பற்றி மாணவி தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்த மாணவியின் பதிவைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் கட் டொழுங்கு நடைமுறைகள் பற்றி யும் தவறான பாலியல் நடத்தைகள் எப்படி கையாளப்படுகின்றன என் பது பற்றியும் விவாதங்கள் தலை எடுத்தன.

எல்லா மாணவர்களின் குளி யல் அறைகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்துவதன் தொடர்பில் மாணவர்களுடன் சேர்ந்து தான் செயல்படப்போவதாக இந்தப் பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாணவர்கள், துறை கள், ஊழியர்கள் ஆகியோருக்காக மரியாதை, இணக்கம், புரிந் துணர்வு பற்றி கல்வி ஆண்டு தொடங்கும்போது இந்தப் பல் கலைக்கழகம் கல்வி போதனை ஆய்வரங்குகளை நடத்தும் என் றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மறுபரிசீலனைக் குழு தன் பணியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவசரத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு இருப்பதாக திருவாட்டி கே குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!