நீர் ராக்கெட், லெகோவுடன் களைகட்டிய இஸ்தானா

நீர் ராக்கெட், லெகோவுடன் களைகட்டிய இஸ்தானா

1 mins read
26620130-83a9-4b23-b90a-4c9ed1405a61
'லெகோ பிரிக்ஸ்'களால் அமைக்கப்பட்ட இஸ்தானா மாதிரியைத் தமது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்‌ஷி யுடன் இணைந்து அறிமுகப் படுத்தும் அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்).படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மே தினத்தையொட்டி இஸ்தானா வில் நேற்று பொது வரவேற்பு தினம் நடைபெற்றது.

இஸ்தானாவின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் 200 'லெகோ பிரிக்ஸ்' களால் அமைக்கப்பட்ட இஸ்தானா வின் மாதரி ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்த மாதிரியை உருவாக்க லெகோ நிறுவனத்தை அதிபரின் அலுவலகம் நியமித்தது. இதற்கேற்ப லெகோ நிறுனத்தின் சான்றிதழ் பெற்ற நிபுணர் ஒருவரின் கைவண்ணத்தில் இஸ்தானாவின் மாதிரி உருவாக் கப்பட்டது.

பொது வரவேற்பு தினத்தை ஒட்டி இஸ்தானாவுக்கு வருகை புரிந்திருந்த சிறாரும் அவர்களது பெற்றோரும் அங்கு வைக்கப் பட்டிருந்த நீர் ராக்கெட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட கலமான 'மார்ஸ் ரோவரின்' மாதிரியை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கிப் பார்க்கும் அனுபவம் சிலருக்குக் கிடைத்தது.

'ஜர்னி டு ஸ்பேஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்தானாவுக்கு வந்திருந்தோர் தொலைநோக்கி யைக் கொண்டு சூரியனைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு வாழ்நாள் கற்றல் மன்றம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்தது.

"இஸ்தானாவின் 150வது ஆண்டு நிறைவுக்காக நினைவு மாதிரியை அறுமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்தானா சிங்கப்பூரின் முக்கிய சின்னமாகும்.

"பொது வரவேற்பு தினத்தை ஒட்டி இஸ்தானாவுக்கு வந்திருந்த சிங்கப்பூரர்கள் பலரைச் சந்தித் ததில் மகிழ்ச்சி," என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.