தமது தேவாலய நண்பர்களுடன் மாலத்தீவுகளுக்கு விடுமுறைக் காகச் சென்றிருந்த சிங்கப்பூர் பல் மருத்துவரான டாக்டர் ஜிம்மி டேங் சியான் பியாவ் (படம்), அங்கு உயிரிழந்தார்.
மாலே பவளத்தீவின் வடக்குப் பகுதியில் உல்லாச விடுதி ஒன்றின் அருகிலுள்ள கடற்கரைக்காயலில் டாக்டர் டேங், கடந்த திங்கட்கிழமை அசைவற்ற நிலையில் மிதந்து கிடந்ததாக மாலத்தீவுகள் செய்தி இணையப்பக்கமான 'மால்டீவ்ஸ் இன்டிபெண்டன்ட்' தெரிவித்தது.
இந்தச் சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 12.39 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டது.
தலைநகர் மாலேயிலுள்ள ஏடிகே மருத்துவமனைக்கு டாக்டர் டேங்கை அதிகாரிகள் உடனடியாகக் கொண்டு சென்றபோதும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடிய வில்லை.
டாக்டர் டேங்கின் உடல் பிரேதப் பரிசோதனை உட்படுத் தப்படவில்லை என்று கூறப்படு வதால் அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆயினும், நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது டாக்டர் டேங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட தால் நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கக்கூடும் என்று தாம் கேள்விப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அவரது நண்பர் ஒருவர் தி நியூ பேப்பர் நாளிதழிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
டாக்டர் டேங் பீஷானில் பல் மருத்துவராக பணிபுரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் டேங்கின் நல்லுடல் நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.
"மாலத்தீவுகளில் உயிரிழந்த சிங்கப்பூரரின் குடும்பத்திற்கு வெளியுறவு தனது ஆழ்ந்த அனு தாபங்களைத் தெரிவித்துக்கொள் கிறது," என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
"தேவையான தூதரக உதவி யை வழங்க உயிரிழந்தவரின் குடும்பத்தாரை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்," என்றார் அவர்.

