ஓரின உறவு குறித்து மாறிவரும் மக்களின் மனப்போக்கு

ஓரின உறவு குறித்து மாறிவரும் மக்களின் மனப்போக்கு

1 mins read

ஓரினக் காதலர்களின் உரிமைகள் குறித்த அம்சங்களின் தொடர்பில் சிங்கப்பூரர்களிடையே கணிசமான மனமாற்றம் ஏற்பட்டு உள்ளதாக கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஓரினப் பாலியல் உறவு, ஓரின திருமணம், ஓரினத் தம்பதிகள் பிள்ளையைத் தத்தெடுப்பது உள்ளிட்ட அம்சங்களை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பைவிட இப்போது மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்வதாக தெரிய வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இவ்வாண்டு ஜன வரிக்கும் இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பாலியல் உறவு ஏற்படுவது முற்றிலும் தவறல்ல, அல்லது பெரும்பாலான நேரத்தில் தவறல்ல என்று 20 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் கருத்து தெரி வித்தனர்.

2013ஆம் ஆண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது 10 விழுக்காட்டினரே இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருந் தனர்.

சமூக, அரசியல், நன்னெறி விவகாரங்களில் பொதுமக்கள் இடையே தற்போது எத்தகைய மனப்போக்கு நிலவுகிறது என்பதை அறிவது இந்த ஆய்வின் நோக்கம்.

4,000க்கும் அதிகமான சிங்கப் பூரர்கள், நிரந்தரவாசிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.