சுடச் சுடச் செய்திகள்

தேச நிறுவனர்களின் நினைவிடக் கட்டட வடிவமைப்பு: அடுத்த கட்டத்திற்கு ஐந்து குழுக்கள் தேர்வு

சிங்கப்பூரின் முன்னோடித் தலை வர்களைக் கௌரவிக்கும் தேச நிறுவனர்களின் நினைவிடத்துக் கான கட்டட வடிவமைப்புப் போட்டி யில் ஐந்து குழுக்கள் அடுத்த கட்டத்துக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளன. 

இந்தப் போட்டிக்கு உள்ளூர், வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 193 பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருந்தன. 

சிங்கப்பூர் நிறுவ னங்களோடு அனைத்துலகக் கட்டட வடிவ மைப்பு நிறுவனங் களும் தங்களது வடிவமைப்புத் திட்டங்களைப் போட்டிக்கு அனுப்பி வைத்து இருந்தன.

கட்டட வடிவமைப்பிற்கான பரிந்துரைகளுக்கு இவ்வாண்டு ஜனவரியில் அழைப்பு விடுக்கப் பட்டது. மரினா பேயில் உள்ள கரையோரப் பூந்தோட்டத்தின் பே ஈஸ்ட் கார்டனில் அமையவுள்ள நினைவிடத்திற்கான ஆகச் சிறந்த வடிவமைப்பு வரவேற்கப்பட்டது.

பூந்தோட்டத்திற்குள் அமைய உள்ள இந்த நினைவிடம், இரண் டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூர் கடந்து வந்த பாதையை எடுத்துக்கூறும். குறிப்பாக, நாட்டின் வளர்ச்சியில் இடம்பிடித்த முக்கிய மைல்கற்கள் நினை விடத்தில் இடம்பெறும்.

இப்போட்டியின் முதல் கட்டம் 12 வாரங்கள் நீடித்து கடந்த மாதம் 5ஆம் தேதி நிறைவுபெற்றது.

கட்டட வடிவமைப்புகள் குறித்து, சிங்கப்பூர் தேசிய அரும் பொருளகத்தில் இம்மாதம் 25, 26ஆம் தேதிகளில் விளக்கப் பயிலரங்குகள் நடத்தப்படும் என்று தேச நிறுவனர்களின் நினைவிடத் துக்கான குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon