தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்ட நிறுவனங்களுக்கு $3.68 மில்லியன்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்ட நிறுவனங்களுக்கு $3.68 மில்லியன்

1 mins read

சட்டத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்ட நிறுவனங் களுக்கு $3.68 மில்லியன் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

'டெக் செலரேட்' எனப்படும் விரைவுத் தொழில்நுட்பத் திட்டத் தின்படி, சட்ட நிறுவனங்கள் அடிப் படை, உயர் தொழில்நுட்பத் தேவை களுக்காகும் செலவில் 70% வரை முதலாண்டில் இந்த நிதியிலிருந்து பெறலாம்.

சட்ட அமைச்சு, சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இத்திட்டத்தை நேற்றுத் தொடங்கி வைத்தன.

வழக்கறிஞர்கள் தங்களது அன்றாடப் பணிகளை அதிக திற னுடன் செய்ய உதவும் நிர்வாகப் பயன்பாட்டுக்கான கருவிகள், இணையத்தில் சட்டத் துறை ஆய்வுகள், ஆவண நிர்வாகம் போன்றவை அடிப்படை தொழில் நுட்பமாகும்.

ஆவணத் திரட்டு, ஆவண மறுஆய்வு, கட்சிக்காரர்கள் தொடர்பான செயல்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற தொழில்நுட்பங்கள் உயர் தொழில்நுட்பமாகும்.