ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள 'தி ஃபுளோரவேல்' கொன் டோமினியத்தில் வசிக்கும் குடி யிருப்பாளர்கள் சிலர், தங்களுக்குத் தெரியாமல் தங்களது முகவரியில் வெளிநாட்டு ஊழியர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது வீடுகளை வாட கைக்கு விடவில்லை என்றாலும் வாடகை வருமானம் பெற்றதாக வரி செலுத்த வேண்டியிருப்பது குறித்து அவர்கள் கவலை தெரி வித்துள்ளனர். வாடகைதாரர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள் பவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொண்டால் தாங்களும் அதற்கு பொறுப்பேற்க வேண்டியிருப்பது குறித்தும் வீட்டு உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஏறக்குறைய 700 வீடுகளைக் கொண்டிருக்கும் இந்த கொன்டோ மினியத்தில், வெளிநாட்டு ஊழியர் களின் முகவரி பதிவால் குறைந் தது 10 வீட்டு உரிமையாளர்களாவது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முறையான ஆவணங்கள் இன்றி சிங்கப்பூரில் பொய்யான முகவரிகளைப் பதிவு செய்வது கடினம் என்ற போதிலும் இந்தச் சூழல் எப்படி சாத்தியம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

