நூற்றுக்கணக்கான ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது இணைய வங்கிக் கணக்குப் பதிவுகளில் பணப் பரிவர்த்தனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவாகியிருப்பதைக் கண்டனர். இது குறித்து அவர்களுக்குப் பலமுறை குறுந்தகவல்களும் அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது.
இருந்தபோதும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்புத்தொகைகள் பாதிக்கப்படவில்லை என்று ஓசிபிசி வங்கி நேற்றிரவு 11 மணிக்குத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
பலமுறை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட பிரச்சினையைச் சரிசெய்துவிட்டதாக ஓசிபிசி வங்கி இரவு சுமார் 11.45 மணிக்குத் தெரிவித்தது. ஆயினும் பரிவர்த்தனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவாகிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இணைய வங்கிச் சேவை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என்றது அந்த வங்கி.
பின்னிரவு 1.30 மணிக்கு இணைய வங்கிச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது. நடந்தவற்றுக்கு அந்த வங்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது.

