பலதுறைத் தொழிற்கல்லூரியில் இன்னும் சுலபமாக சேரலாம்

பலதுறைத் தொழிற்கல்லூரியில் இன்னும் சுலபமாக சேரலாம்

1 mins read
0071772a-e619-4176-9007-fa0b9212bd2d
-

பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவர்கள் இனிமேல் இன்னும் சுலபமாகச் சேர முடியும் என்றும் பட்டயம் பெற்ற பிறகு அவர்களுக்கு கூடுதல் தெரிவுகள் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்திருக்கிறார்.

தெமாசிக் பலதுறை தொழிற்கல்லூரியின் முதலாம் பட்டயமளிப்பு விழாவில் பேசிய திரு ஓங், வேலை செய்யும் பெரியவர்களைச் சேர்ப்பதற்காக பலதுறை தொழிற்கல்லூரிகளில் மாணவர்களை முன்கூட்டியே சேர்ப்பதற்கான திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

வேலை செய்பவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது பலதுறை தொழிற்கல்லூரிகள் அவர்களின் கல்வித்தகுதி மட்டுமின்றி வேலை அனுபவத்தையும் கருத்தில் கொள்ளும் என்று திரு ஓங் தெரிவித்திருக்கிறார். "இந்த ஏற்பாட்டால் வேலை செய்பவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கம் அடைவர் என்பது எங்கள் விருப்பம்," என்றார் திரு ஓங்.