இணையவழி நிதிதிரட்டு கூடியது; புகார்கள் குறைந்தன

இணையவழி நிதிதிரட்டு கூடியது; புகார்கள் குறைந்தன

1 mins read

அறப்பணிகளுக்காகவும் உதவி தேவைப்படும் தனிநபர்களுக்காக வும் 'கிரௌட்ஃபண்டிங்' இணை யத்தளங்கள் மூலம் கடந்த ஆண்டில் அதிகமான நிதி திரட் டப்பட்டது. அத்தகைய இணையத் தளங்கள் மீதான புகார்களின் எண்ணிக்கையும் குறைந்தன.

இணையவழி நன்கொடை தொடர்பில் பொறுப்புடைமையை யும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டில் வழிகாட்டி நெறிமுறை கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக புகார்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக அற நிறுவன ஆணையர் தெரிவித் தார்.

தேசிய தொண்டூழிய, கொடை மையத்தால் நடத்தப்படும் Giving .sg என்ற இணையத்தளம் கடந்த ஆண்டில் மட்டும் அறப் பணிகளுக்காக $30 மில்லிய னுக்குமேல் திரட்டியது. முந்தைய 2017, 2016ஆம் ஆண்டுகளில் முறையே $26 மில்லியன், $20 மில்லியன் தொகையை அந்த இணையத்தளம் திரட்டியிருந்தது.

சென்ற ஆண்டில் மட்டும் இணையத்தளங்களும் தனி நபர்களும் 1,159 நிதிதிரட்டுப் பிரசாரங்களைத் தொடங்கினர். இந்த எண்ணிக்கை 2017ல் 827 ஆகவும் 2016ல் 548ஆகவும் இருந்தன.