பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர விரும்புவோருக்கு அதிக வாய்ப்பு

பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர விரும்புவோருக்கு அதிக வாய்ப்பு

2 mins read

பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து பயில விரும்புவோருக்கு அங்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பலதுறைத் தொழிற்கல்லூரி களுக்கான 'முன்கூட்டிய மாணவர் சேர்க்கை நடவடிக்கை', வேலை செய்வோரும் சேர்ந்து பயிலும் வகையில் இந்த ஆண்டில் விரிவு படுத்தப்படும்.

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் நேற்று நடந்த பட்ட மளிப்பு விழாவின்போது திரு ஓங் இதனை அறிவித்தார்.

இயல்திறன் அடிப்படையில் 'முன்கூட்டிய மாணவர் சேர்க்கை நடவடிக்கை' இடம்பெற்று வரு கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்களது இறுதித் தரநிலைகளைப் பெறுவதற்கு முன்னரே பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு விண் ணப்பிக்க முடியும். தகுதியுள்ளோ ருக்கு நிபந்தனைகளின் அடிப்ப டையில் இடமளிக்கப்படும்.

"பணியில் இருப்பவர்கள் பல துறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கும் போது அவர்களின் தற்போதைய, பொருத்தமான வேலை அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். இளம் வயதில் அவர்கள் பெற்ற கல்வித் தேர்ச்சி முடிவு களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது. இது, பணியில் இருப் போர் தங்களது திறன்களை மேம் படுத்திக்கொள்ள புதிய கதவைத் திறந்துவிடும் என நம்புகிறோம்," என்று அமைச்சர் ஓங் கூறினார்.

வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவர்கள், 'ஓ' நிலைத் தேர்வு எழுதாமல் நேரடியாக பட்டயப் படிப்பில் சேர வகைசெய்யும் 'பல துறைத் தொழிற்கல்லூரி அடிப்ப டைக் கல்வித் திட்டம் (பிஎஃப்பி)' என்ற ஓராண்டுத் திட்டத்தில் சேர்க் கப்படும் மாணவர்களின் எண் ணிக்கையும் உயர்த்தப்படவுள்ளது. இப்போது, தரநிலையில் முதல் 10 விழுக்காட்டினராக இருக்கும் அவ் விகிதம் இனி முதல் 15 விழுக்காட் டினர் என மாற்றப்படும்.