மாணவர்களுக்கு இனி காகிதச் சான்றிதழ்களோடு மின்னிலக்கக் கல்விச் சான்றிதழ்களும் வழங்கப் படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.
உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, உயர்கல்வி நிலையங் களில் பயிலும் மாணவர்களோடு சிங்கப்பூர் ஊழியரணி தேர்ச்சித் தகுதிகளுக்கும் மின்னிலக்கச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த மின்னிலக்கச் சான்றி தழ்கள் 'மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கணக்குகளில் தானாகவே சேர்க் கப்பட்டுவிடும். 'சிங்பாஸ்' மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.
'ஓப்பன்செர்ட்ஸ்' என்ற மின்னி லக்கத் தளம் மூலம் தனிநபர்கள் தங்களின் மின்னிலக்கச் சான் றிதழ்களை எளிதாகச் சரிபார்க்க இயலும். இதன்மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் களை இணைத்து அனுப்புவது எளிதாகும் என்பதால் விண்ணப்ப தாரர்களுக்கும் நிறுவனங்களுக் கும் பயனுள்ளதாக அமையும்.

