1எம்டிபி விவகாரத்தின் தொடர்பில் கோல்ட்மன் சேக்ஸ் குழுமத்தின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங், அவரது குடும்பத்தார் ஒப்புவித்த சுமார் $35 மில்லியனை மலேசியாவுக்குத் திருப்பிச் செலுத்த சிங்கப்பூர் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண் டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங் களை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறை களின் தொடர்பில் சிங்கப்பூர் நீதிமன்றம் அண்மைய வாரங்களில் அனுமதி அளித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பிலான கேள்விகளுக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை.
அதேபோல அமெரிக்காவும் 200 மில்லியன் அமெரிக்க டாலரை (S$272.8 மில்லியன்) மலேசியாவுக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இது அடுத்த வாரத்துக்குள் நடைபெறக் கூடும் என்று தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப் பிட்டது. இது தொடர்பான கேள்விகளுக்கு அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்க வில்லை.
1எம்டிபி நிதியிலிருந்து சுருட்டப்பட்ட $6.14 பில்லியன் மதிப்பிலான தொகையை மீட்டெடுக்க சுவிட்சர்லாந்து முதல் சிங்கப்பூர் வரையிலான பல நாடுகளை மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது நாடினார்.
1எம்டிபியின் $8.86 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்பதில் கோல்ட்மன் நிறு வனத்துக்கு இருந்த தொடர்பு காரணமாக மலேசியாவிலும் அமெரிக்காவிலும் இங் குற்றச் சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

