தேசிய தொசிங்கப்பூரின் ஆக பழைய தொடக்கக் கல்லூரியான தேசிய தொடக்கக் கல்லூரி, வேளாண்-தொழில்நுட்ப வசதியை அமைக்க, புதிதாக தொழில் தொடங்கிய நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து பணியாற்றிய முதல் பள்ளி என்ற பெருமை யுடன் அதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.
தேசிய தொடக்கக் கல்லூரி யின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த வசதிக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பும் உணவுத் தொழில்நுட்ப நிறுவனமான 'லைஃப்3 பயோடெக்'கும் ஆதரவு வழங்கியுள்ளன.
அதிகளவில் சிறந்த தரம் வாய்ந்த பயிர்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து மாணவர்கள் ஆராய இந்த வசதி ஒரு சோதனை தளமாக அமையும் என்று அக்கல்லூரி கூறியது. தேசிய தொடக்கக் கல்லூரியின் 50வது கல்லூரி தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, இந்தப் புதிய வசதி உரிய நேரத்தில் வந்து இருப்பதாக கருத்துரைத்தார்.

