சிங்கப்பூர் சாலைகளில் ஆசியாவின் முதல் நகரும் தோட்டம்

பொதுப் போக்குவரத்துப் பேருந் துகள் மேற்கூரையில் செடிகளுடன் நேற்று சாலைகளில் வலம் வந்தன. ஆசியாவிலேயே முதல் முயற்சி எனக் கருதப்படும் இது, 'நகரும் தோட்டம்' என்ற திட்டத்தின் கீழ் லேக்சைட் கார்டனில் தொடங்கி வைக்கப்பட்டது.

பேருந்துகளுக்குள் உள்ள வெப்பநிலை குறைந்து அதன் விளைவால் பேருந்தின் குளிரூட் டும் வசதிக்காக செலவிடப்படும் எண் ணெய் குறைவது தொடர்பில் மூன்று மாதங்கள் நீடிக்கும் ஆய் வுக்காக இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

செடிகள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் லேக்சைட் வட்டாரத் தில் இயங்கும் ஒரு பேருந்துச் சேவையும் அடங்கும். அது 'சைனிஸ் கார்டன்' எம்ஆர்டி நிலையத்திற்கும் சிங்கப்பூர் தோட் டக்கலை விழா நடைபெற்று வரும் 'லேக்சைட் கார்டன்' நிலையத்திற் கும் இடையே சேவையாற்றுகிறது.

இந்த ஆய்வுக்காக மேலும் ஒன்பது 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' பேருந்துச் சேவைகள் பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தோ பாயோ, தெம்பனிஸ், ஆர்ச்சர்ட் சாலை போன்ற இடங் களுக்குச் செல்லும் 139, 145, 13, 39, 45 எண் கொண்ட பேருந்துச் சேவைகள் இதற்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூரிலேயே தயாரான மண் தேவைப்படாத 'காயாமாட்' முறை இச்செடிகளுக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தெமாசிக் அறநிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு உள்ள இத்திட்டம், தேசியப் பூங்காக் கழகம், 'மூவ் மீடியா', சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று உள்ளது.

இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிலையில் நகரங்கள் இயங்க வேண்டும். அத்துடன் 'பசுமைக் கூரைகள்' ஒரு நகரத் திற்கு மிக முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வை இது போன்ற திட்டங்கள் வழி ஏற்படுத்த விரும்புவதாகத் திட்டத்தின் நிறு வனர் ஸேக் டோ கூறினார்.

திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட செடிவகைகளும் சிங்கப்பூரின் பருவநிலைக்குத் தோதானவை என்றும் அடிக்கடி தண்ணீர் ஊற்றத் தேவை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

பசுமைக் கூரைகள் கொண்ட கட்டடங்களும் வாகனங்களும் இருந்தால் வெளிப்புற வெப்பநிலை குறையும் என்று நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!