தெம்பனீஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் கழிவறையில் சண்டையிடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயெனப் பரவத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நடந்தது குறித்து அறிவதாகவும் அது தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் அந்தப் பள்ளி கூறியுள்ளது.
கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் மேல் சட்டை அணிந்திருக்கவில்லை. மற்றொருவன் சிவப்பு நிற பள்ளிச் சட்டையை அணிந்திருந்தான். அவர்களைச் சுற்றி குறைந்தது எட்டு சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததை 48 வினாடிகளுக்கு நீடித்த அந்தக் காணொளி காட்டியது.
காணொளியின் இறுதியில் அந்த இரு சிறுவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தவாறு காணப்பட்டனர்.

