அரசுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம்

அரசுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம்

1 mins read

பொய்ச் செய்திகளை எதிர்கொள்ள தற்போது இருக்கும் சட்டத்தைவிட புதிய சட்டம் குறுகியது என்றார் அமைச்சர் சண்முகம். பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின்கீழ் பதிவேற்றம் செய்யப்படும் அறிக்கைகளில் பொய்ச் செய்திகள் இருப்பதாகக் கூறுவும் அறிக்கையைத் திருத்தச் சொல்லவும் அல்லது அறிக்கையை அகற்ற சொல்லவும் அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாக திரு சண்முகம் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்றும் அமைச்சர் சொல்வது தவறாக இருந்தால் செய்திக்கு எதிராக அமைச்சரின் உத்தரவு ரத்து செய்யப்படலாம் என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

பொய்ச் செய்திகளைப் பரப்புதல் என்ற புது வகை குற்றத்தைப் புதிய சட்டம் உருவாக்குகிறது என்று எழுந்துள்ள எதிர்ப்புகளை திரு சண்முகம் மறுத்தார். தொலைதொடர்பு சட்டத்தின்கீழ் பொய்ச் செய்திகளைப் பரப்புவது ஏற்கெனவே குற்றச் செயலாகக் கருதப்படுவதாக அவர் கூறினார். இது இணையத்திற்கும் பொருந்தும் என்றார் அவர்.