பொய்ச் செய்திகளுக்கு எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டம்

பொய்ச் செய்திகளை எதிர்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ள சட்டம் குறித்து நாடாளு மன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இணையப் பொய்யுரைகள் உண்மையைத் தகர்த்தெறிவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

இணையம் மூலம் பொய்ச் செய்திகளைப் பரப்பும் மூன்று பிரிவினர்களை அமைச்சர் சண்முகம் பட்டியலிட்டார். தகவல் போர் முறையைப் பயன்படுத்தும் நாடுகள், வர்த்தக ரீதியில் லாபம் நாடுவோர், அரசியல் லாபத்துக் காகவும் பிற சமூகத்தினரைத் தாக்கவும் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் ஆகிய பிரிவுகளை அமைச்சர் சுட்டினார்.

பொய்ச் செய்திகளை ஆயுதமாகப் பயன் படுத்தி இவர்கள் உண்மையை, நம்பிக்கையைத் தகர்ப்பதாக திரு சண்முகம் தெரிவித்தார்.

மத்திய கிழக்கைச் சேர்ந்த மூன்று ஆடவர்களால் தாம் தாக்கப்பட்டதாக ஜெர்மனியில் பெண் ஒருவர் பொய்ச் செய்தி வெளியிட்டதை அமைச்சர் எடுத்துக்காட்டாக காட்டினார். லாபத்துக்காக சமூக ஊடகம் வாயிலாக பொய்ச் செய்தி பரப்புபவர்களின் பொய்யுரைகள் அரசியல் ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். அரசியல் காரணங்களுக்காகவும் சொந்த விருப்பு வெறுப்பு காரணங்களுக்காகவும் சிலர் வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்புவதாக தெரிவித்த திரு சண்முகம், அவர்களது இச்செயல் சொந்த நாட்டையும் பிற நாடுகளையும் பாதிப்பதாகக் கூறினார்.

பிரிட்டனில் நடைபெற்ற பிரெக்சிட் வாக்கெடுப்பை அவர் உதாரணம் காட்டினார். அப்போது குடிநுழைவு பற்றி அதிகமாகப் பேசப்பட்டபோது அதுதொடர்பாக பல பொய்ச் செய்திகள் வெளியானதை அமைச்சர் சுட்டினார்.

இணையம் மூலம் பரப்பப்படும் பொய்ச் செய்திகளைக் குறிவைத்து அவற்றை விரை வாக எதிர்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ள சட்டம் இலக்கு கொண்டிருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அதே சமயத்தில் புதிய சட்டம் நீதிமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் என்றார் அவர். இதனால்தான் இணையப் பொய்ச் செய்திகளை அகற்ற ஏற்கெனவே சட்டங்கள் இருக்கும்போது புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரும்புவதாக இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது திரு சண்முகம் தெரிவித்தார். புதிய சட்டம் குறித்து சிலர் கவலை தெரிவித்திருப்பதாக கூறிய அமைச்சர், அதுதொடர்பான ஐந்து குறை கூறல்களைப் பட்டியலிட்டார்.

பேச்சுரிமை பாதிப்பு

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்காது என்றார் திரு சண்முகம். மாறாக பொய்ச் செய்திகள் பாதிக்கப்படும் என்றார் அவர்.

உண்மை என்றால் என்ன?
உண்மை என்றால் என்ன என்பதை புதிய சட்டம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர். சட்டத் தின்கீழ் கருத்துகள் பற்றி குறிப்பிடப்பட வில்லை என்றும் சிலர் தெரிவித்தனர். தற் போதைய சட்டத்திலேயே உண்மை எது பொய் எது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

பொதுநலனுக்கு எதிரான செய்திகள்
பொதுநலனுக்கு எதிராக இருப்பதால் மட்டும் செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது. அவை பொய்ச் செய்திகளாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

அமைச்சரின் முடிவை எதிர்ப்பது சிரமம்
இதை மறுத்த அமைச்சர், ஒரு செய்தியைப் பொய்ச் செய்தி என்று அமைச்சர் முடிவெடுத்தால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!