மோசமான துன்புறுத்தல் பற்றி போலிசாரிடம் நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும்

மோசமான துன்புறுத்தல் பற்றி போலிசாரிடம் நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும்

1 mins read

மிக மோசமான துன்புறுத்தல் அல்லது தொல்லை விளைவித்தல் வழக்குகளை போலிசாருக்கு தெரியப்படுத்தும் கடமை நீதிபதி களுக்கு உள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலிசாரிடம் தெரிவிக்காமல் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் வந்தாலும் அதுகுறித்து போலிசாரிடம் நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும்.

இத்தகைய வழக்குகளுக்காக புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து நாடாளு மன்றத்தில் நேற்று விவாதிக்கப் பட்டது.

அரசு நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட பரிந் துரை செய்யப்பட்டிருக்கும் இந்தப் புதிய நீதிமன்றம் அனைத்து வகை துன்புறுத்தல், தொல்லை விளைவிக்கும் குற்றங்களை விசாரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

துன்புறுத்தல், தொல்லை விளைவித்தல் தொடர்பான வழக்குகளைக் கையாளப் பயிற்சி பெற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை ஏற்று நடத்துவர்.