நாடாளுமன்றத்தில் பிரதமர் லீ சியன் லூங்கின் இடப் பக் கத்து இருக்கை இப்போது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைய அமைச்சரவை மாற்றத்தில் திரு ஹெங் துணைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு, முன்னாள் துணைப் பிரதமரும் தற்போதைய மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் அமர்ந்திருந்த இருக் கையில்தான் இப்போது திரு ஹெங் அமர்கிறார். சமுதாய கொள்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான
திரு தர்மன் இப்போது பிரதமர் லீயின் வலப்பக்க இரண்டாவது இருக்கையில் அமர்கிறார்.
வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், இப்போது நிதி அமைச்சரான திரு ஹெங்குக்குப் பக்கத்தில் அமர்ந்துள் ளார். இப்போது பிரதமர் லீ, திரு ஹெங், திரு டியோ இருவ ருக்கும் இடையே அமர்ந்துள்ளார்.

