அம்ரின்: சிங்கப்பூரில் காசநோய் கட்டுப்பாட்டு இலக்கை வகுப்பது சிரமம்

அம்ரின்: சிங்கப்பூரில் காசநோய் கட்டுப்பாட்டு இலக்கை வகுப்பது சிரமம்

2 mins read

சிங்கப்பூரில் காசநோய் கட்டுப்பாட்டின் இலக்கை வகுப்பது சிரமம். குறிப்பிடத்தக்க முதியவர்களுக்கு காசநோய் அறிகுறிகள் மறைந்து இருப்பதே அதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலப்போக்கில், தன்னை உயர் வருமானம் ஈட்டும் நாடு களுடன் ஒப்பிட்டு, சிங்கப்பூர் இலக்கு வகுக்கும். அந்த விகி தம் ஒவ்வொரு 100,000 பேருக்கு 20க்கும் குறைவான காச நோய் சம்பவங்கள் என்று இருக்கிறது.

"1950களிலும் 1960களிலும் காசநோய் சம்பவங்களின் எண் ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது முதிய சிங்கப்பூரர் களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் மறைந்தே இருக்கின் றன. முதியவர்களிடம் நோய்த் தடுப்புச் சக்தி குறைந்து கொண்டே வருவதால் அவர்களிடம் உள்ள அறிகுறிகளை எளி தில் கண்டறிய முடிவதில்லை. ஆக, இலக்கு வகுப்பது சிரம மாக உள்ளது," என்றும் திரு அம்ரின் விளக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் காசநோய் விகி தம் ஒவ்வொரு 100,000 பேருக்கு 37 முதல் 41 சம்பவங் களாக இருந்து வருகிறது. கடந்தாண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள்.

மறைவான காசநோய் இப்போது 2 முதல் 29 விழுக்காட்டு சிங்கப்பூரர்களைப் பாதிக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைவான காசநோய் உள்ளவர்களிடம் அதன் அறிகுறிகள் தெரியாது, மற்றவர்களிடம் அதை அவர்கள் பரப்ப முடியாது. ஆனால், பத்து பேரில் ஒருவருக்கு நாளடைவில் முழுமையான காசநோய் வரக்கூடும் என்றும் திரு அம்ரின் விளக்கினார்.