சுடச் சுடச் செய்திகள்

வெற்றுத்தளத்தில் ‘பிஎம்டி’: நகர மன்றங்கள் தடை விதிக்கலாம்

அடுக்குமாடிக் கட்டடங்களின் வெற்றுத்தளத்தில் தனிநபர் நட மாட்டச் சாதனங்களைப் பயன்படுத் துவது குடியிருப்பாளர்களின் பாது காப்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று நகர மன்றங்கள் கருதினால், அவை அதற்குத் தடை விதிக்கலாம் என்று போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் தெரிவித்துள்ளார்.

நடைபாதைகளில் தனிநபர் நட மாட்டச் சாதனங்கள் (பிஎம்டி), சைக்கிள்கள் பயன்படுத்த்தப்படு வது உந்து நடமாட்டச் சட்டத்தின் கீழ் வருவதால், மின்தூக்கித் தளங்கள், அஞ்சல்பெட்டி பகுதி களை உள்ளடக்கிய வெற்றுத்தளங் கள் சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் டாக்டர் லாம் கூறினார்.

“இந்த இடங்களில் அவை மக்களுக்கு ஆபத்தை விளைவிக் காது என்று கருதப்பட்டதே அதற் குக் காரணம்.

“ஆக, இத்தகைய இடங்களில் அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது உட்பட, நகர மன்றங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பில் தங்கள் சொந்த விதி முறைகளை வகுத்து, நடைமுறைப் படுத்தலாம்,” என்று டாக்டர் லாம், புக்கிட் தீமா தொகுதி உறுப்பினர் திரு முரளி பிள்ளை கேட்ட கேள் விக்குப் பதிலளிக்கும்போது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

“கடந்த மாதம் புக்கிட் பாத் தோக் வெஸ்ட் அவென்யூ 6, புளோக் 186ன் வெற்றுத்தளத்தில், 65 வயது மாது ஒருவர் தனது அஞ்சல்பெட்டியில் கடிதங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது,  ஒரு மின்ஸ்கூட்டரால் மோதித் தள்ளப்பட்டார். 

ஆகவே, வெற்றுத்தளம் போன்ற இடங்களிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன் படுத்துவதில் கட்டுப்பாடுகளை போக்குவரத்து அமைச்சு விதிக்க முடியுமா,” என்று  திரு முரளி கேட்டிருந்தார்.

“ஒவ்வொரு நகர மன்றமும், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பில் சொந்த விதிமுறை களை வகுப்பதைக் காட்டிலும் வெற்றுத்தளத்தையும் உள்ளடக் கிய உந்து நடமாட்டச் சட்டத்தை விரிவுப்படுத்த முடியுமா,” என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப் பினர் திரு பிரித்தம் சிங் கேட் டிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதி லளித்து பேசிய அமைச்சர், “வெவ் வேறு வெற்றுத்தளங்கள் வெவ் வேறு விதங்களில் அமைக்கப்பட்டி ருப்பதால், அதில் தனிநபர் நட மாட்டச் சாதனங்கள் செல்வதைத் தடுக்கும் நீக்குப்போக்கான அதி காரம் நகர மன்றங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

“வெற்றுத்தளத்தில் பிஎம்டி சாதனங்களைத் தடை செய்வது ஏற்புடையது என்று நகர மன்றங் கள் கருதினால் அவை நகர மன் றத் துணைச் சட்டத்தின் மூலம் அதை நிறைவேற்றலாம்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

நகர மன்ற ஊழியர்கள் பொதுப் பாதை கண்காணிப்பாளர் களாகச் செயல்பட உந்து நடமாட் டச் சட்டம் அனுமதிப்பதில்லை. 

இதன் தொடர்பில் உந்து நட மாட்டச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையத்துடனும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடனும் போக்குவரத்து அமைச்சு பேசி வருகிறது என்றும் டாக்டர் லாம் சொன்னார். 

வெற்றுத்தளங்கள் வெவ்வேறு விதங்களில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் செல்வதைத் தடுக்கும் நீக்குப்போக்கான அதிகாரம் நகர மன்றங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon