25 பள்ளிகளுக்கு 'எச்பிவி' தடுப்பூசி

25 பள்ளிகளுக்கு 'எச்பிவி' தடுப்பூசி

2 mins read
d2abd7d0-0a57-4f84-925f-4712fb92be3f
-

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வரை, மொத்தம் 25 பள்ளி களுக்கு தேசிய பள்ளிகள் சார்ந்த 'எச்பிவி' எனப்படும் கருக்குழாய் வாய் புற்றுநோய்க்கு எதிராக தடுப் பூசியை இலவசமாகப் போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 93 விழுக்காட்டு மாணவிகள் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என் றும் அவர் கூறினார்.

தேசிய பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் கருக்குழாய்வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அறிவித்தது.

அதன்படி அந்தத் திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது.

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண் டும் 200 பெண்கள் கருக்குழாய் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர். அவர்களில் 70 பெண் கள் மடிகின்றனர்.

இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறிய பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டதால் அவ் வாறு செய்தார்களா அல்லது தாங் களே சொந்தமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டை செய்துகொள்வதற்காக வெளியேறி னார்களா என்று மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி உறுப்பினர் திரு அலெக்ஸ் யாம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் கோர், "அந்தத் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பற்றி ஒரு விழுக் காட்டுக்கும் குறைவான பெற் றோரே அக்கறை கொண்டனர்.

"பெற்றோர் தடுப்பூசி திட்டத் துக்கு சம்மதிக்கவில்லை என்றால், அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்து வத்தை விளக்குவோம். பின்னர் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு," என்றும் விவரித் தார்.

கருக்குழாய்வாய் புற்றுநோயைத் தடுக்கும் இந்தத் தடுப் பூசியைப் போட்டுக்கொள்ள உலக சுகாதார நிறுவனமும் இதர முன் னணி சுகாதார அமைப்புகளும் பரிந்துரைக்கின்றன.

"பெற்றோர்கள் இது குறித்து மருத்துவர்களிடம் பேசலாம். அவர்கள் மிகச் சரியான விளக் கத்தை அவர்களுக்கு வழங்க லாம்," என்றார் டாக்டர் கோர்.

சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் தொடர்ந்து பெற்றோரிடமும் மாணவர்களி டமும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத் தையும், அவசியத்தையும், பாதுகாப்பு அம்சங்களையும் விளக்கிக் கூறும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் அமைச்சர் ஏமி கோர் மேலும் கூறினார்.