உட்லண்ட்ஸ் ரோட்டில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உட்லண்ட்ஸ் ரோட்டுக்கும் உட்லண்ட்ஸ் அவென்யூ 3க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட இவ்விபத்து பற்றிய தகவல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
கவனக்குறைவால் கடுமையான காயத்தை விளைவித்ததன் பேரில் அந்த லாரியின் 51 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

