விவியன்: மலேசியாவுடனான உறவு நிலையாக இருக்கிறது

விவியன்: மலேசியாவுடனான உறவு நிலையாக இருக்கிறது

1 mins read
63881c30-5a92-4436-8b17-2024425bec1d
-

மலேசியாவுடனான உறவில் கூடுதலான நிலைத்தன்மை இருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இதன் தொடர்பில் முயற்சிகள் மேலும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

மலேசியாவுடன் ஒத்துழைக்க சிங்கப்பூர் விரும்புவதாகவும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மே 8ஆம் தேதி) கூறினார். கடந்த மாதம் நிகழ்ந்த சிங்கப்பூர்-மலேசிய தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது நிகழ்ந்த கலந்துரையாடல் குறித்து டாக்டர் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விளக்கமளித்தார். கடல் எல்லை, குடிநீர் விநியோகம், வான்வெளி பயன்பாடு, நிலப்போக்குவரத்து ஆகியவற்றைப் பற்றி அந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கையை மலேசியாதான் எடுக்கவேண்டும் என்றும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து உரிய காலத்திற்குள் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என விரும்புவதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.