சுடச் சுடச் செய்திகள்

நாடாளுமன்றச் செய்தி: சட்டவிரோத ஏற்றுமதிகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்

சட்டவிரோத ஏற்றுமதிகளை, குறிப்பாக கடல் சுங்கச் சாவடிகள் வழியான ஏற்றுமதிகளைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தேசிய வளர்ச்சிக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். 

சட்டவிரோதமாக எறும்புதின்னியின் செதில்கள் இங்கு விற்கப்படு வதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஆகாயம், தரை சுங்கச்சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் அனைத்துப் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால், அளவு காரணமாக கடல்வழியாக கொண்டுவரப்படும் சரக்குகளில் சில மட்டுமே அடையாளம் காணப்பட்டு சோதிக்கப்படுவதை சுன் சூலிங் ஒப்புக்கொண்டார். 

“தற்போது அதிகளவிலான சரக்குகளை விரைந்து சோதிக்க முன்னோடி ஆய்வுகளைச் செய்து வருகிறோம். இது செயல்படக்கூடிய ஒன்றாக இருந்தால் எதிர்காலத்தில் அவற்றைப் பயன்படுத்துவது பற்றி ஆராயலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon