சுடச் சுடச் செய்திகள்

நாடாளுமன்றச் செய்தி: ஓங்: அரசியல் விவாதம் பற்றிய கவலைதான் கல்வியாளர்களுக்கு

பொய்ச்செய்திக்கு எதிரான சட்டம் அரசியல் விவாதங்களை பாதிக்கக் கூடும் என்பதே கல்வியாளர்களின் உண்மையான கவலையாக உள் ளது என்று கூறிய கல்வி அமைச்சர் ஓங் யி காங், கல்வி ஆய்வுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படாது என உறுதியளித்தார்.

சென்ற மாதம் கல்வியாளர்களி டம் இருந்து இணையம் வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத் துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட மசோதா குறித்த விவாதத்தில் நேற்று பேசிய அமைச்சர் ஓங், இந்தச் சட்டம் சுயதணிக்கைக்கு வழிவிடும் என்று கடந்த மாதம் 124 கல்வியாளர்கள் எழுதிய கடிதத்துக்கு பதிலளித்தார்.  

அறிவியல், அனுபவ ரீதியிலான ஆதாரங்களுக்கு அரசாங்கம் உண்மையாக இருக்கும். கருத்து அடிப்படையிலான ஆய்வில் கார சாரமான பொது விவாதம் இடம் பெறும்.

இந்த இரண்டு நிலைகளிலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் படாது என்றார் அமைச்சர்.

ஆய்வு பொய்யான அவதானிப்பு கள் அல்லது தரவுகளைப் பயன் படுத்தும்போது இச்சட்டம் பயன் படுத்தப்படும். அத்தகைய சம்பவத் தில், அந்த ஆய்வு தரமான பல் கலைக்கழகம் அல்லது ஆய்வுக் கழகத்தின் நிபுணத்துவ தரத்தை எட்ட முடியாது என்றார் அவர்.

கல்வியாளர்களின் முக்கிய கவலை ஆய்வு அல்ல. சிங்கப்பூரில் அரசியல் விவாதங்களை முடக்க இந்தச் சட்டம் தவறாகப் பயன் படுத்தப்படுமா என்பதுதான் என திரு ஓங் கூறினார். 

ஏனெனில், அனைத்து ஆய் வாளர்களும், ஆய்வாளர்களாக மட்டுமிருப்பதில்லை. சிலர் ஆர்வ லர்களாகவும் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

கல்வி ஆய்வைப் போராட்டத்து டன் இணைக்க முடியாது  என்ற அமைச்சர் அரசாங்கத்தைக் குறை கூறும் எந்த ஆர்வலரும் இந்தச் சட்டத்தின்கீழ் வரமாட்டார்கள். அனைத்து ஆர்வலர்களையும் இச்சட்டம் ஒரே கண்ணோட்டத் துடன் அணுகும். இச்சட்டம் கல்வி யாளர்களைக் குறிவைக்காது. சாதாரண குடிமகன்போல் அரசாங் கத்தைப் பற்றி அவர்கள் கருத்துக்கூறலாம் அல்லது நடப்பு விவகாரங்கள் குறித்து குறை கூறலாம். அதேபோல், ஆர்வலரோ, கல்வியாளரோ சமுகத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொய்ச்செய்தியைப் பரப்பும் எவராக இருந்தாலும் அவர் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

“கல்வியாளர்களுக்கு சட்டம் சிறப்பு பாதுகாப்பை வழங்காது,”  என்று அமைச்சர் ஓங் கூறினார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon