பொய்ச் செய்திகளுக்கு எதிராகப் பரிந்துரைக்கப்படும் சட்டத்தின்படி, சிங்கப்பூரிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நடைமுறை கோட் பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருக்கும்.
இந்நிறுவனங்கள் தளங்கள் பொய்யுரைகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படு வதைத் தவிர்ப்பது இதன் நோக்கம்.
நடைமுறை கோட்பாடுகள் மூன்று இலக்குகளைக் கொண்டி ருக்கும்: தங்களது அடையாளத்தை மூடிமறைத்து இணையக் கணக்கு களைத் தவறாகப் பயன்படுத்தும் தீய எண்ணங்கொண்ட வேடதாரி களைத் தடுப்பது மற்றும் முறியடிப் பது, அரசியல் விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மையை மேம் படுத்துவது, இணையப் பொய்யுரை களை மட்டுப்படுத்துவது ஆகியன அவ்விலக்குகள் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
இத்தகைய விவகாரங்களை எதிர்ப்பாட்டுடன் கையாளுவது இணையப் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு அவசியம் என்று அவர் சொன்னார்.
இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத் திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது அவர் பேசினார்.
நகல் சட்டத்தின் நடைமுறை கோட்பாடுகளின்கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் போன்ற இணைய இடையீட்டுத் தளங்கள், பொய்யான கணக்குகள் உருவாக்கப்படுவதை அல்லது தீய நோக்கங்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படுவதைத் தடுப்பதற்குப் போதிய சரிபார்ப்பு நடவடிக்கை களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனத் திரு ஈஸ்வரன் விவரித்தார்.

