சிங்கப்பூரின் ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து புதிய சேவையை அறிமுகப்படுத்து கிறது.
ஆனால் இந்த சோதனைத் திட்டத்தில் சிறிய எண்ணிக்கை யிலான பயணிகள் மட்டுமே பங் கேற்க அனுமதிக்கப்படும்.
பின்னர் மற்றொரு தேதியில் மற்ற பயணிகளுக்கும் சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.
கம்ஃபர்ட்டெல்குரோ கைபேசி செயலி மூலம் அந்நிறுவனத்தின் 12,000 டாக்சிகளையும் ஏராளமான தனியார் டாக்சிகளையும் பயன் படுத்த புதிய சேவை வழிவகுக்கும்.
டாக்சிகளின் கட்டணமும் டாக்சிகளுக்கான தேவையைப் பொறுத்து அமையும். டாக்சிகளுக் கான தேவை அதிகமாக இருக்கும் போதும் குறைவாக இருக்கும் போதும் அதற்கு ஏற்ப கட்டணம் அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும். இந்தக்கட்டணம் முன் கூட்டியே செயலி மூலம் தெரி விக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.
புதிய சேவையில் எத்தனை தனியார் கார்கள் பங்கேற்கின்றன என்ற விவரங்களை கம்ஃபர்ட் டெல்குரோ வெளியிடவில்லை.
ஆனால் கூடுதலான டாக்சி களால் டாக்சிகளுக்கான தேவையை குறைக்க உதவும்.
குறிப்பாக மழைக்காலங்களிலும் டாக்சிகளின் எண்ணிக்கையை மிஞ்சும் அளவுக்கு டாக்சி தேவைப் படும் காலங்களிலும் டாக்சி நெருக்கடியை குறைக்க புதிய சேவை உதவும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
அதே சமயத்தில் பாரம்பரியமான மீட்டர் கட்டண வாய்ப்பும் தொடரும் என்றும் அது கூறியது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் புதிய சேவை பற்றிய விவரம் வெளியானது.
கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி யின் தலைமை நிர்வாகி ஆங் வெய் நெங், "2018ல் டாக்சி பதிவு 7.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது, இந்தப்போக்கு இவ் வாண்டின் முதல் காலாண்டிலும் தொடர்கிறது," என்றார்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் சோதனை அடிப்படையில் தொடங்கும் புதிய சேவையில் தேவைக்கு ஏற்ப மாறும் கட்டண முறை கடைப்பிடிக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

