சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதி களில் நேற்று இடி, மின்னலுடன் கடும் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன.
எங் நியோ அவென்யூவுக்கு வெளியேறும் பாதைக்கு முன்பு துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையிலும் மரம் சாய்ந் ததில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. காலை 11.13 மணியளவில் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் தீவு விரைவுச்சாலையில் போக்கு வரவு தடை ஏற்பட்டுள்ளதாகவும் தாம்சன் ரோட்டுக்கு வெளியேறும் பாதை வரை போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டுள்ளதால் எச்சரிக்கை யுடன் வாகனங்களை ஓட்டுமாறும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்தது.
மோட்டார் வாகனமோட்டிகள் 4, 5 தடங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
காலை 11.30 மணியிலிருந்து 12.45 மணி வரையில் போக்கு வரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ஸ்டோம்ப் வாசகர் ஒருவர், காணொளி ஒன்றை படம் பிடித்து வெளியிட்டிருந்தார். அதில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை ஊழியர்கள் சிலர் அகற்றிக் கொண்டிருந்தனர். பிடோக் நார்த் ரோட்டில் புளோக் 116க்கு அடுத்துள்ள பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து கிடந்த ஒரு படத்தை ஃபெங்ஷான் நாடாளுமன்ற உறுப் பினர் செரில் சானும் நேற்று காலை 11.30 மணி அளவில் பதிவேற்றி யிருந்தார். நகர மன்றம் மரத்தை அகற்றும் என்றும் குடி யிருப் பாளர்கள் இந்த இடத்திலிருந்து விலகி யிருக்குமாறும் மற்றொரு பதிவில் அவர் கேட்டுக் கொண்டார்.

