தேசிய சேவை சட்டத்திற்குப் புறம்பாக நாட்டைவிட்டு வெளியேறியவர் மீது குற்றச்சாட்டு

தேசிய சேவை சட்டத்திற்குப் புறம்பாக நாட்டைவிட்டு வெளியேறியவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
37fe7be8-1b43-4564-805b-54c1512fe9d3
-

தேசிய சேவை சட்டத்திற்குப் புறம்பாக சிங்கப்பூரைவிட்டு அனுமதியின்றி வெளியேறியது தொடர்பாக 25 வயது திருமால் பவித்ரன் மீது வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தேசிய சேவை புரியவேண்டிய காலக்கட்டமான 2010ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கும் 2016ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதிக்கும் இடையே அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேறியிருந்தார்.

சிங்கப்பூரைவிட்டு ஏன் வெளியேறினார், அவர் எதற்காக மீண்டும் இங்கு திரும்பினார் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் வெளியிடப்படவில்லை.

2017ஆம் ஆண்டு மே மாதம் தேசிய சேவையில் சேர்ந்த திருமால் தற்போது முதலாம் வகுப்பு கார்பரலாக உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை திருமால் ஒப்புக்கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தேசிய சேவையைச் செய்யவேண்டிய கடமையைக் கொண்டவர்கள் அவ்வாறு செய்யாமல் அனுமதியின்றி சிங்கப்பூரை விட்டு வெளியேறும் சம்பவங்களைக் கடுமையாகக் கருதுவதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மே 23ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.

அனுமதியின்றி சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.