டோவர் ரயில் நிலையத்திற்கு அருகே வாகன விபத்து

டோவர் ரயில் நிலையத்திற்கு அருகே வாகன விபத்து

1 mins read
32fb723d-5c09-483e-9941-7f0d3c5e445d
-

டோவர் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்த கார், டாக்சி ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து டாக்சி ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கமான்வெல்த் அவென்யூ வெஸ்ட் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர், தடம் மாற முயன்றபோது கார் திடீரென சுழன்றது. காரின் மீதான கட்டுப்பாட்டை அதன் ஓட்டுநர் இழந்துள்ள நிலையில் அது மத்திய தடத்தில் சென்றுகொண்டிருந்த டாக்சிக்குப் பின்னால் மோதியது. அதன் பிறகு அந்தக் கார், சாலையோரத்திலுள்ள விளக்குக் கம்பத்தையும் பேருந்து பின்னாலும் மோதி நின்றது.

ஜாலான் பூன் லேயை நோக்கிச் செல்லும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சாலை வழியே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் புதன்கிழமை காலை சுமார் 9.20 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

டாக்சி ஓட்டுனரான 64 வயது மாது சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவது குறித்த விசாரணை தொடர்கிறது.