புதிய, மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு முறை

புதிய, மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு முறை

2 mins read
25ded87e-b4cf-4d47-a55f-bd1cf4097d09
புதிய ஒருங்கிணைக்கப்பட்ட தளமேடை ஏணி. படம்: சாவ்பாவ் -

புதிய, மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு முறையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதிகளில் உயரமான இடங்களில், எண்ணெய்க் கிடங்கு களில் தீச்சம்பவம் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு தீயை அணைக்க 60 மீட்டர் உயரம் வரை நீட்டிக்கக்கூடிய ஏணி கொண்ட தீயணைப்பு வண்டிகளும் அடங்கும். ஏணியின் உயரம் 20 மாடி கட்டடத்துக்குச் சமம். இதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தளமேடை ஏணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதிய தீயணைப்பு முறைகளை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் வருடாந்திர பணித் திட்டக் கருத்தரங்கில் அறிமுகம் செய்தது.

இந்த நிகழ்வு சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆழமில்லா கடற்பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காகப் பயன் படுத்தக்கூடிய 'ஜெட் ஸ்கீ'களும் அறிமுகம் செய்யப்பட்டன.

குடிமைத் தற்காப்புப் படையின் ஆகப் புதிய வசதியான ஒருங் கிணைக்கப்பட்ட தளமேடை ஏணி ஏற்கெனவே ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பயன்பாட்டில் உள்ளது.

அதில் மீட்புக் கூண்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

500 கிலோ வரையிலான எடையை அந்தக் கூண்டு தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, நிமிடத் துக்கு 3,800 லிட்டர் தண்ணீர் வரை பீய்ச்சியடிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு.

மேலும், தீப்பிடித்து எரியும் இடங்களை உயரத்திலிருந்து படமெடுத்துக் காட்ட ஒருங் கிணைக்கப்பட்ட தளமேடை ஏணியில் கேமரா பொருத்தப் பட்டுள்ளது.

கேமராவில் பதிவாகும் காட்சிகளை கைபேசி செயலி மூலம் அதிகாரி பார்க்கலாம். இதன் மூலம் நிலைமையைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அது பற்றி நல்ல புரிதல் ஏற்பட்ட பிறகு தீயணைப்பு வீரர்களை அனுப்ப லாம். அறிமுக நிகழ்வில் மேம் படுத்தப்பட்ட 'எம்ஓடிஎஃப்எஸ்' தீயணைப்பு வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.